in

ராஜமவுலி இல்லேனா….. பொன்னியின் செல்வன் வந்திருக்காது மணிரத்னம்

ராஜமவுலி இல்லேனா… பொன்னியின் செல்வன் வந்திருக்காது – மணிரத்னம்
ஐதராபாத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணிரத்னம், இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி தெரிவித்தார்.கல்கி எழுதிய பொன்னியின் செல்வனுக்கு திரை வடிவம் கொடுக்க எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் தொடங்கி தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு ஜாம்பவான்கள் முயன்ற போதிலும், அது நிறைவேற்ற முடியாமல் போனது. இறுதியாக இதனை ஒரு சவாலாக ஏற்ற இயக்குனர் மணிரத்னம், தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவான பொன்னியின் செல்வன் படத்தை நனவாக்கினார். அப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீசாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. அப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அந்த வகையில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரம்மாண்டமான புரமோஷன் நிகழ்ச்சியில் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படம் உருவாக ராஜமவுலி தான் காரணம் என கூறினார். இதுகுறித்து அவர் பேசியதாவது : “இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர் பாகுபலியை மட்டும் எடுக்காமல் இருந்திருந்தால், பொன்னியின் செல்வனும் உருவாகி இருக்காது. அவருக்கு பெரிய நன்றி. அவரை சந்தித்தும் இதை நான் கூறினேன். அவர் தான் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக எடுக்க வழிகாட்டி உள்ளார். ஒட்டுமொத்த திரையுலகிற்கு வரலாற்று படம் எடுக்கும் ஆர்வம் பாகுபலிக்கு பின் தான் வந்துள்ளது. பல வரலாற்று கதைகளை சொல்ல அவர் தான் கதவை திறந்து வைத்துள்ளார்” என தெரிவித்தார்.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நீதிமன்ற தீர்ப்பால் குஷியான – ரக்ஷிதா | Rakshita is happy with the court verdict

Ps 2 நைட் பார்ட்டியில் போதையில் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராய் | Aishwarya drunk in ps2 promotion party