விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி பகுதியில் குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகி வரும் குடியிருப்பு வாசிகள். நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
ராஜபாளையம் நகராட்சி 34 வார்டுகளை கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ராஜபாளையம் நகராட்சியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்ததன் காரணமாக பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி உள்ளது .
இந்நிலையில் திருவனந்தபுரம் விஐபி நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அந்தப் பகுதியில் கடக்க முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், தேங்கியுள்ள மழை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதாகவும் குறிப்பாக விஷ ஜந்துக்கள் அதிகளவில் குடியிருப்பு பகுதிக்குள் வருவதாகவும் இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதாகவும்,
மேலும்பகுதியில் 4 ஏக்கர் நிலத்தில் 20க்கு மேற்பட்ட விவசாயிகள் அகத்திக்கீரை. பொன்னாங்கண்ணிக் கீரை. பால்கீரை என கீரை வகைகள் பயிரிட்டு வருகின்றனர். அங்கும் மழை நீர் சூழ்ந்ததால் கீரை விவசாயிகள் ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர்மன்ற தலைவரிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். நகராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் உடனடியாக மழை நீர் தேங்காத வண்ணம் சாலை மற்றும் கழிவு நீர் செல்லும் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.