ரஜினி, விஜய், போன்ற பிரபலங்களின் டுவிட்டர் முடக்கம்
டுவிட்டரை Elon Musk வாங்கியதில் இருந்து அதில் நிறைய மாற்றங்களை அவர் கொண்டு வருகிறார். Blue Tick வைப்பதில் கூட நிறைய மாற்றங்கள் வரப்போகிறது என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தங்களது நிஜ பெயரில் இருந்து பட புரொமோஷக்காக பிரபலங்கள் பெயரை மாற்றுவது வழக்கம். அப்படி சமீபத்தில் பொன்னியில் செல்வன் படத்தில் நடித்த த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி தங்களது பெயரை மாற்ற Blue Tick பறிபோனது. அவர்களாவது பெயரை மாற்றினார்கள், தற்போது மேலும் சில பிரபலங்களின் Blue Tick போனது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், விஜய், கிரிக்கெட் வீரர்கள் தோனி, விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்ட பிரபலங்களின் Blue Tick நீக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் சந்தா செலுத்தாத நிலையில் பெரும்பாலான பிரபலங்களின் கணக்குகளில் இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

விஜய் செய்த உதவியால் திணறி போன ராகவா லாரன்ஸ் | Raghava Lawrence was overwhelmed by Vijay’s help

GIPHY App Key not set. Please check settings