in

யாரை வேணா கல்யாணம் பண்ணலாம், நடிகரை மட்டும் கல்யாணமே பண்ண கூடாது

யாரை வேணா கல்யாணம் பண்ணலாம், நடிகரை மட்டும் கல்யாணமே பண்ண கூடாது

 

ஒரு நடிகரை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று நினைத்தேன், ஆனால் அந்த தவறை மட்டும் செய்ய கூடாது என்று பிறகு உணர்தேன் என்று அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் நடிகை மதுபாலா கூறியுள்ளார்.

அழகன் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகை மதுபாலா அறிமுகமானார். பிறகு Director Maniratnam அவர்கள் இயக்கிய ரோஜா படத்தில் அரவிந்த் சாமி…இக்கு ஜோடியாக மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

பிறகு சங்கர் இயக்கத்தில் ஜெண்டில்மேன் என்ற படத்தின் மூலம் popular ஆனார். தமிழில் உச்சத்தில் இருக்கும் போதே ஹிந்தி பக்கம் சென்றுவிட்டார். திடிர் என்று திருமணம் செய்து தமிழ் ரசிகர்களுக்கு Goodbye சொல்லிவிட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு SunTv சீரியல் ஒன்றில் தலை காட்டினார். மீண்டும் பிரியாணி, தேஜாவு போன்ற தமிழ் படங்களிளும் நடித்தார். அவரை பற்றி ஏன் இந்த Buildup என்று Viewers நினைக்கலாம், அண்மையில் அவர் கொடுத்த பேட்டி தற்போது viral …ஆகி வருவதுதான் அதற்கு காரணம்

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது ஒரு விளம்பரத்தில் நடிபதற்காக நான் சென்றபோது தான் அவரை சந்தித்தேன், அவர் பெயர் ஆனந்த், பல சந்தர்பங்களில் அவரை பார்க்க நேர்ந்த போது எங்களுக்குள் காதல் மலர்ந்தது.

பிறகு திருமணம் செய்துகொண்டோம். நான் சினிமாவில் நுழைந்தபோது ஒரு நடிகரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நினைத்தேன், ஆனால் நடிகர்களின் மனநிலையோ இன்று ஒருவர், நாளை ஒருவர், நாளை மறுநாள் ஒருவர் என்றுதான் இருக்கும்.

அந்த கொடுமை எல்லாம் நான் அனுபவித்த போது ஒரு நடிகரை மட்டும் கல்யாண செய்ய கூடாது என்று முடிவெடுத்தேன். நானும் என் கணவரும் சண்டை போடும் போது, ஷோரூமில் ஒரு காரை செலக்ட் பண்ணுவது போல என்னை தேர்வு செய்துவிட்டாய் என்று தான் கூறுவேன்.

ஆனந்த்திற்கு உருகி உருகி காதலிக்க தெரியாது. ஆனால் என்னை உண்மையாக நேசிப்பவர், நான் சண்டை போடும் போதுதெல்லாம் என்னை சரியாக handle பண்ணுவார். அவருக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையே அவரது தலை முடி..தான்.

நான் அவரை மீட் பண்ணுன்போது கூட அவருக்கு தலை முடி இல்லை, அதை நான் பிரச்னையாக எடுத்து கொள்ளவில்லை, மனசு தான் முக்கியம். Industry…யை புரிந்து கொண்டு இனிதாக வாழ்கையில் பயணிக்கிறார்.

What do you think?

தஞ்சையிலிருந்து புறப்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண பொருட்கள்

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான வாள் விளையாட்டு போட்டி