மேடையில் அவமானப்படுத்தப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த ஞாயிறு அன்று புனேவில் concert நடத்தி இருந்தார். அதற்கு அதிக அளவில் ரசிகர்களும் வந்திருந்தனர்.இரவு 10 மணியை தாண்டி ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென போலீஸ் அதிகாரி ஒருவர் மேடையில் ஏறி அனைத்தையும் நிறுத்தச்சொன்னார். ஏ.ஆர்.ரஹ்மானை நோக்கி கையை காட்டி அந்த போலீஸ்காரர் ஆவேசமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. 10 மணி தாண்டியதற்காக தான் concert நிறுத்தப்பட்டது என போலீஸ் கூறினாலும், ஒரு சர்வதேச அளவில் புகழ் பெற்ற இசைக்கலைஞரை இது அவமானப்படுத்தப்படுவது போல ஆகும் என ரசிகர்கள் ட்விட்டரில் கொந்தளித்து வருகின்றனர்.
#DisRespectOfARRahman என்ற ஹேஷ்டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் ரசிகர்கள் கோபமாக சில பதிவுகள் ட்விட்டர் இல் பதிவிட்டுள்ளனர்.
GIPHY App Key not set. Please check settings