மெயின் வில்லனாக இந்தியன் 2 ..வில் மிரட்டவருபவர் இவர்தான்
நடிகர் கமல்ஹாசன், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2 படம். இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் சேனாபதி கேரக்டரில் மீண்டும் நடித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் அவருக்கு மேக்கப் போட 4 மணிநேரங்கள் ஆகும் நிலையில், சூட்டிங்கை அதற்கேற்ப திட்டமிட்டு ஷங்கர் இயக்கிவருகிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் திருப்பதி, சென்னை, தைவான், ஆப்ரிக்கா என அடுத்தடுத்த இடங்களில் திட்டமிட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது சென்னையில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. தொடர்ந்து மீண்டும் வெளிநாட்டில் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் மெயின் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தன்னுடைய போர்ஷனை படத்தில் நிறைவு செய்துள்ள நிலையில், இந்த விஷயத்தை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் பேட்டியொன்றில் பேசிய எஸ்ஜே சூர்யா, தான் மிகப்பெரிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளதாக தகவல் தெரிவித்தார். இந்தப் படம் குறித்துதான் அவர் அந்த பேட்டியில் பேசியிருந்தது தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து கேரக்டர் ரோல்கள், ஹீரோ கேரக்டர்கள், வில்லன் என அதிரடி சரவெடியாக காணப்படுகிறார் இந்நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கும் அவர் வில்லனாகியுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காம்பினேஷன் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம்.
GIPHY App Key not set. Please check settings