முதலமைச்சர் தொடர்ந்து உள்துறை அமைச்சரும் போக்குவரத்து சிக்னலை நிறுத்த வேண்டாம் என உத்தரவு….
சிக்னலில் மக்களுடன் நின்று பயணிக்க விருப்பம். எனக்காக போக்குவரத்து சிக்னலை நிறுத்த வேண்டாம்.. காவல்துறைக்கு முதலமைச்சர்
ரங்கசாமி உத்தரவு.
புதுச்சேரியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வரும்போது போக்குவரத்து சிக்கனலை நிறுத்துவது அறிவிக்கப்படாத ஒரு உத்தரவு..
தற்பொழுது கோடை வெயில் காரணமாக போக்குவரத்து சிக்னலில் ஏராளமான மக்கள் காத்திருக்கும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தனது வீட்டிலிருந்து சட்டமன்றத்துக்கு வரும்பொழுது போக்குவரத்து சிக்கனல் நிறுப்படுத்தப்பட்டது.இதனை அறிந்த அவர் உடனடியாக போக்குவரத்து காவல்துறை அதிகாரியிடம் தனக்காக போக்குவரத்து சிக்னல் நிறுத்த வேண்டாம்.காத்திருந்து மக்களுடன் பயணிப்பதாக கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் செல்லும்போது பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்து சிக்னலை நிறுத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings