மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்கிறார் ஜோதிகா.
கடந்த 1998ம் ஆண்டு வெளியான டோலி சஜா கே ரக்னா இந்தி படம் மூலம் நடிகையானவர் ஜோதிகா. அதன் பிறகு எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் ரிலீஸான வாலி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். இதையடுத்து கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டில் ஆனார் சென்னையில் இருந்த ஜோதிகா அண்மையில் தான் தன் கணவர் சூர்யா, பிள்ளைகளுடன் மும்பையில் செட்டில் ஆனார். மும்பையில் பல கோடி மதிப்புள்ள அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விகாஸ் பெஹல் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தி படத்தில் கமிட்டாகியிருக்கிறார் ஜோதிகா.25 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்கிறார் ஜோதிகா. அஜய் தேவ்கனுடன் சேர்ந்து ஜோதிகா நடிப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் மாதவனும், ஜோதிகாவும் ஏற்கனவே சேர்ந்து நடித்தவர்கள்.
GIPHY App Key not set. Please check settings