மிரட்டலான ட்ரெய்லரில் பிச்சைக்காரன் 2
தனக்கென தனி பாணியில் ரசிகர்களை கவரும் வகையில் விசித்திரமான வார்த்தைகள் கொண்ட பாடல்களை கொடுத்து ட்ரெண்டான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த விஜய் ஆண்டனி அவர்கள் நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் களமிறங்கினார்.
இந்த வரிசையில் தனது திரைப் பயணத்தில் இயக்குனர் சசி இயக்கத்தில் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தையும் உருவாக்கியுள்ளார்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் அடைந்த விஜய் ஆண்டனி அவர்கள் பின்னர் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். பின் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போன நிலையில், வருகிற மே 19ஆம் தேதி பிச்சைக்காரன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மாஸான ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings