மாமன்னன் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடிய வடிவேலு
இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இசையமப்பாளர் ஏ ஆர் ரஹ்மானோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் படம் ஜூன் மாதம் ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது.இந்நிலையில் சமீபத்தில் மாமம்மன் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. அந்த போஸ்டரில் வடிவேலுவின் லுக் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் விரைவில் மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்வில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் கலந்துகொள்ள வைக்க உதயநிதி ஸ்டாலின் சார்பாக முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. உதயநிதியின் கடைசி படமாக மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் மே 19 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த பாடலை ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ளார். யுகபாரதி இந்த பாடலை எழுதியுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings