மாநாடு போல் லியோ ஆடியோ லாஞ்சை நடத்த வேண்டும் ஆர்டர் போட்ட விஜய்
நடிகர் விஜய் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த வேண்டாம் என படக்குழுவினரிடம் அறிவுறுத்தி உள்ளாராம்.நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து வரும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 50 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.. லியோ படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர். நடிகர் விஜய்யின் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக லியோ இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில் லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்த அப்டேட்டை அப்படத்தின் தயாரிப்பாளர் லலித் வெளியிட்டுள்ளார். சென்னையில் கடந்த 2 தினங்களாக தக்ஷின் மாநாடு நடைபெற்றது ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். நேற்று லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்தும் கலந்துகொண்டார். அப்போது தான் லியோ ஆடியோ லாஞ்ச் குறித்த அப்டேட்டை அவர் வெளியிட்டார்.அதன்படி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த வேண்டாம் என விஜய் தெரிவித்ததாகவும், அதற்கு பதிலாக திருச்சி, மதுரை அல்லது கோயம்புத்தூர் போன்ற மாநகரங்களில் பிரம்மாண்ட மேடை அமைத்து அனைத்து ஊரில் இருந்தும் ரசிகர்களை வரவழைத்து நடத்தலாம் என விஜய் ஐடியா கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். சமீப காலமாக நடிகர் விஜய், படிப்படியாக சில அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வரும் இந்த வேளையில், லியோ ஆடியோ லாஞ்சை மாநாடு போல நடத்த பிளான் போட்டு உள்ளதால், ஒருவேளை அந்த நிகழ்வில் தனது அரசியல் எண்ட்ரியை அறிவிக்கப்போகிறாரோ என கேள்வியும் எழுகிறது.
GIPHY App Key not set. Please check settings