மறுவாழ்வு பெற்ற 10 லட்சம் மதுபான விடுதி ஊழியர்கள்

 

கரோனா பொதுமுடக்க தளர்வு காரணமாக மதுபான விடுதி, உணவகங்களின் உள்பகுதிகள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டதால், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் லண்டனில் பணிக்குத் திரும்பினர். இதனால், கடந்த 5 மாதங்களாக வேலையிழந்த நிலையில், அவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது.

மேலும், தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு கூடங்கள் திறக்கப்பட்டதால், லண்டனில் மட்டுமே இந்த வாரம் 225 மில்லியன் பவுண்ட் வியாபாரமாகலாம் என்றும், இதனால் 5 மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்த பணியாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கலாசாரத் துறை செயலாளர் ஒலிவர் டவ்டன் கூறுகையில், நாம் அதிகம் நேசிக்கும் பொருளை மீண்டும் அடைவதற்கான நல்ல நாள் இந்த நாள் என்றார்.

மதுபான விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர் ஜேசன் அதர்ட்டன் கூறுகையில், மதுபான விடுதிகளில் அடுத்த 3 முதல் 4 வாரங்களுக்கான முன்பதிவு (புக்கிங்) நிறைவடைந்துவிட்டது. இதனால், நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம் என்றார். அதேவேளையில், மதுபான விடுதி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் ஒருசேர லட்சக்கணக்கில் திரள்வதால், இது கரோனா அடுத்த அலைக்கு வித்திடக்கூடும் என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

3 × 1 =