மனைவியை பார்த்து மருத்துவமனையில் மயங்கி விழுந்துட்டேன்… – ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஆளவந்தான்’ படத்தில் இவர் உதவி இயக்குநராக பணியாற்றினார். இவருடைய இயற்பெயர் ரவி. ஆனால், இவர் முதன் முதலாக ‘ஜெயம்’ படத்தில் நடித்ததால் ஜெயம் ரவி என்று மாற்றிக்கொண்டார். கடந்த 2009ம் ஜெயம் ரவி, ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு தற்போது 2 மகன்கள் உள்ளனர். தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ 2ம் பாகம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், ஒரு சேனலுக்கு ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியும் பேட்டி கொடுத்துள்ளனர். அப்போது ஜெயம் ரவி பேசுகையில்,என் மனைவிக்கு முதல் குழந்தைக்கு பிரசவம் பார்க்கும்போது நான் இங்கு இல்லை. வெளிநாட்டில் இருந்தேன். 2ம் குழந்தைக்காக பிரசவம் பார்க்கும்போது நான் என் மனைவியுடன் இருந்தேன். அப்போது மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு உள்ளே நுழைந்துவிட்டேன். என் மனைவி வலியால் துடிக்கும்போது, ஆர்த்தி முகத்தில் ஆக்ஸிஜன் வைத்தார்கள். அப்போது, ஆர்த்தி மூச்சு விட மிகவும் சிரமப்பட்டார். திரும்பிப் பார்க்கிறேன். ஆர்த்தி வயிற்றில் மார்க் போடுறாங்க… அவ்வளவுதான்… நான் அப்படியே மயங்கி கீழே விழுந்துவிட்டேன். என் அம்மா வந்து என்னிடம் நீ ஏன்டா இப்படி இருக்கிற… என்று கேட்டாங்க. ஒரு அடி கூட என்னை அடித்து விட்டார்கள்.
பின்னர் குழந்தையின் சத்தம் கேட்டது. என் அப்பா வந்து சொன்னார் குழந்தை பிறந்து விட்டது என்று.. நான் உடனே கேட்டேன்.. ஆர்த்தி எப்படி இருக்கிறாள் என்று… அப்பா… ஆர்த்தி நன்றாக இருக்காங்கன்னு சொன்னதும்… அவ்வளவு தான்… அந்த நிமிடமெல்லாம் நான் ஒரு மாதிரி ஆகிவிட்டேன் என்று இருவரும் அந்த சம்பவத்தை குறித்து மனம் திறந்து பேசினர்.
GIPHY App Key not set. Please check settings