in

மனைவியை தன்காதலனுடன் சேர்த்துவைத்த நடிகர்

மனைவியை தன்காதலனுடன் சேர்த்துவைத்த நடிகர்

நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையிலிருந்து இயக்குநர் பாக்யராஜ் தன் படத்துக்கு கதையை உருவாக்கியுள்ளார்.நடிகர் சந்திரபாபு திருமண வாழ்க்கை குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 1958 ஆம் ஆண்டு சந்திரபாபு திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் தனது மனைவிக்கு வேறு ஒரு காதலன் இருப்பதை அறிந்த சந்திரபாபு தனது மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்துள்ளதாக இன்றளவும் ஒரு தகவல் கூறப்படுகிறது. இந்த கதையை மையமாக வைத்து தான் நடிகர் பாக்யராஜ் இயக்கிய அந்த 7 நாட்கள் படம் உருவானது என்றும் சொல்லப்படுகிறது.ஆனால் இந்த சம்பவம் உண்மையில்லை என்கிறார்கள். திருமணம் முடிந்ததும் பெங்களூருக்கு மனைவியை அழைத்து கொண்டு சந்திரபாபு தேனிலவுக்கு சென்றார். ஆறு மாதங்கள் இருவரும் குடும்பம் நடத்தினர். மனைவி சந்தோஷமாக இல்லை என்பதை அறிந்த சந்திரபாபு பழைய காதலனின் நினைவில் இருக்கிறார் என புரிந்து கொண்டு அவர் காதலனுடன் சேரட்டும் என அவரை விட்டு பிரிந்துவிட்டார். பின்னர் அவருடைய மனைவி தனது காதலனை திருமணம் செய்து கொண்டார்.சந்திரபாபுக்கு போதைப் பழக்கம் இருந்தது. அத்துடன் அவர் நாயகனாக நடித்த தட்டுங்கள் திறக்கப்படும் படமும் தோல்வியடைய, கடன்கள் அவரை நெருக்கத் தொடங்கியது. கடனுக்காக கோர்ட் அவரது வீட்டை ஜப்தி செய்தது. இதனால் நிலைகுலைந்த, சந்திரபாபு 1974 இல் மரணமடைந்தார் என்று கூறுகிறார்கள்.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா தடை நீடிப்பு | Ban on gutkha, pan masala

காவல் ஆணையரின் காரை எட்டி உதைத்து….. அப்பு வைத்துகொண்ட பிரபல நடிகை