in

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை சாத்தூர் நகர் போலீசார் மடக்கி பிடித்தனர்


Watch – YouTube Click

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை சாத்தூர் நகர் போலீசார் மடக்கி பிடித்தனர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆர்.ஆர். நகர் பகுதியில் வச்சக்கார பட்டி போலீசார் இரவு நேர வாகன சோதனையில் விருதுநகர்-சாத்தூர் நான்கு வழிச்சாலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற போது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றுள்ளார்.

இதையடுத்து வச்சகாரப்பட்டி போலீசார் சாத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் நகர் போலீசார் சாத்தூர் எட்டூர்வட்டம் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் சுங்கச்சாவடியில் தடுப்பில் மோதி கீழே விழுந்தார்

அங்கு பணியிலிருந்த சாத்தூர் நகர் போலீசார் அந்த இளைஞரை பிடித்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுக்ரீவன் என்பவரின் மகன் விஷ்ணுராம்(16) இவர் தனது நண்பர்களுடன் நேற்று நள்ளிரவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்களை திருடி உள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் மட்டும் மாட்டிக் கொண்டேன் நண்பர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று விட்டனர்.எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சுக்ரீவனிடம் சாத்தூர் நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 6 ஆம் தேதியை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் பலத்த சோதனை

தெலுங்கானா முதல்வர் நாளை பதவி ஏற்பு