in

மதுபான கடையில் சத்தமாக பேசியதால் வந்த வினை


Watch – YouTube Click

மதுபான கடையில் சத்தமாக பேசியதால் வந்த வினை

குடிபோதையில் தகராறு

கத்தி மற்றும் பீர் பாட்டலால் குத்தி கொலை செய்ததால் ஜேசிபி ஆபரேட்டர் பரிதாபலி…

இருவர் படுகாயத்துடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள வ.உ.சி நகர் பகுதியில் சேர்ந்த சரத், புது வானியங்குளம் தெருவை சேர்ந்த சதீஷ் ஆகிய இருவரும் திருவண்ணாமலை அடுத்த ஒட்டகுடிசல் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடை அருகே அரசு அனுமதி இல்லாமல் தனியார் பார் இயங்கி வந்துள்ளது.

இந்த பாருக்கு அருகில் சதீஷ் மற்றும் சரத் ஆகிய இருவரும் நேற்று இரவு மது அருந்தி உள்ளனர்.

இவருக்கு அருகாமையில் மற்றொரு கும்பல் 4க்கு மேற்பட்டோர் அதே இடத்தில் மது அருந்தி உள்ளனர்.

இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மர்ம கும்பல் சரத் மற்றும் சதீஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் சரத் அவரது அண்ணன் ஜேசிபி ஆபரேட்டர் சரவணனுக்கு தன்னை அடித்ததாக தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக சரவணன் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

அப்பொழுது இரண்டு தரப்பினருக்கும் இடையே மீண்டும் கைகலப்பு மோதலாக மாறியது.

இதில் 4 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் சரவணன், சரத், சதீஷ் ஆகிய மூன்று நபர்கள் மீது பீர் பாட்டிலை உடைத்தும் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி உள்ளனர்.

இதில் சரவணனுக்கு வயிற்றுப் பகுதியில் கத்திக்குத்து ஆழமானதால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

சரத் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்ப இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் கொலை செய்யப்பட்ட சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் சரத் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் மது அருந்திக் கொண்டிருக்கும்போது சத்தமாக பேசியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஆடையூர் மற்றும் அத்தியந்தல், கோசாலை பகுதிகளை சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சதீஷ் மற்றும் சரத் ஆகிய இருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் சரத் தனது அண்ணன் சரவணனுக்கு செல்போன் மூலம் அழைத்துள்ளார்.

அப்பொழுது மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கியுள்ளனர்.

மேலும் ஆடையூர் மற்றும் அத்தியதல், கோசலை பகுதிகளை சேர்ந்த மர்ம கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணன் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தியும் பீர் பாட்டிலால் வயிற்று பகுதியில் கிழித்த கூறப்படுகிறது.

இதனால் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிர் இருந்ததாகவும் மர்மகும்பல் அங்கிருந்து தப்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகத்திற்கிடமான ஆடையூர் மற்றும் கோசாலை பகுதிகளை சேர்ந்த இரண்டு நபர்களை மேற்கு காவல் நிலைய போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து தற்போது விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவுபடி துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் 3 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தற்போது குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

01-12-2023 பக்தி செய் (ஆன்மீக செய்திகள்) BHAKTHI SEI AANMIGA SEITHIKAL

வீராணம் ஏரியை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு