in

மதங்களை கடந்து மகளின் திருமணத்தை நடத்தும் கோவை டிஎஸ்பி ஆனால் சாதி பார்க்க தவறவில்லை…

https://youtu.be/0-EtH_iPCDM%5B/embed%5D

மதங்களை கடந்து மகளின் திருமணத்தை நடத்தும் கோவை டிஎஸ்பி ஆனால் சாதி பார்க்க தவறவில்லை

கோவையை சேர்ந்த டி.எஸ்.பி ஒருவர் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ மதங்களை சேர்ந்த குருமார்கள் முன்னிலையில் தனது மகளின் திருமணத்தை நடத்த உள்ள நிலையில், அந்த திருமண பத்திரிகை சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி-யாக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் எஸ்.ஐ.சி எனப்படும் மதம் தொடர்பான பிரச்சினைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவு பிரிவில் பணியாற்றியுள்ளார். அப்போது மதம் சார்ந்த பிரச்சினைகளை சிறப்பாக கையாண்டு சுமுக தீர்வுகளை ஏற்படுத்தினார்.

மேலும் கலவரங்கள் ஏற்படும் சூழலில் துரிதமாக செயல்பட்டு அவற்றை கட்டுப்படுத்தியதற்காகவும், தடுத்து நிறுத்தியதற்காகவும் குடியரசுத் தலைவர் விருது மற்றும் அண்ணா விருது பெற்றுள்ளார்.

இந்தநிலையில் முனைவர் பட்டபடிப்பு படித்து வரும் இவரது மகள் நிஷாந்தினிக்கும், திருநெல்வேலியை சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்தை மும்மதங்களை சேர்ந்த மதகுருமார்கள் முன்னிலையில் நடத்த முடிவு செய்துள்ள வெற்றிச்செல்வன், பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார், கவுமார மடாலயம் ராமானந்த குமரகுருபரசுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ், போத்தனூர் மஜ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் இமாம் அப்துல் ரஹீம் இம்தாதிபாகவி ஆகியோர் பெயர்களை தனது மகளின் திருமண அழைப்பிதழில் இடம் பெற செய்து அசத்தியுள்ளார்.

இந்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மதங்களை கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்ற முனைப்புடன் திருமண அழைப்பிதழை அச்சிட்டதன் மூலம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் டி.எஸ்.பி வெற்றிச்செல்வனுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.
கோவை டிஎஸ்பி மதங்களை கடந்து தனது மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தாலும் ஜாதி பார்க்க மறக்கவில்லை. தனது சொந்த ஜாதியை சேர்ந்த மாப்பிள்ளையை தேடி பிடித்து தனது மகளுக்கு அவர் திருமணம் செய்து வைக்க இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தனர்.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அடேங்கப்பா சரத் பாபு அவ்ளோ பெரிய ஆளா? | History Of Sarath Babu

புதுச்சேரி : பட்டபகலில் சட்டை அணியாமல் சாமியார் போர் அணிந்து இருசக்கர வாகனம் திருடிய வாலிபர்…