திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பயிற்சி நிலையம் நூலகம் மற்றும் மகளிர் தங்கும் விடுதி காணொளி காட்சி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார்.
கால்நடை பராமரிப்பு துறை, பால் வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரெட்டியார்பட்டி பகுதியில் ரூ1கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நெல்லை மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறை, பால் வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பயிற்சி நிலையம் நூலகம் மற்றும் மகளிர் தங்கும் விடுதி ரெட்டியார்பட்டி பகுதியில் ரூ1கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனை முன்னிட்டு திருநெல்வேலி ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் நடைபெற்ற விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சரவணன் ஆகியோர் இத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் நெல்லை ஆவின் பொது மேலாளர் தியானேஷ் பாபு, தொழிற்சங்க தலைவர் வேலாயுதம், பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க தலைவர் சுடலைமணி உள்ளிட்டவர்கள் மற்றும் ஆவின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.