போலீஸ் அதிகாரி மீது எச்சில் துப்பிய நபருக்கு சிறை தண்டனை

இங்கிலாந்தின் பௌர்னிமவுத் பகுதியில் போலீஸ் அதிகாரி மீது எச்சில் துப்பிய நபருக்கு 10 வாரங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து.

பௌர்னிமவுத் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீவன் லிகோரிஷ். 41 வயதான இவர், மதுபோதையில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி சார்மின்ஸ்டர் ரோடு பகுதியில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தார். தகவலறிந்த போலீஸ் அதிகாரி ஜோ டெர்ரி மற்றும் போலீஸôர் அங்கு சென்று அவரை அப்புறப்படுத்த முயன்றனர்.

மதுபோதையிலிருந்த ஸ்டீவன் லிகோரிஷ், அதிகாரி ஜோ டெர்ரி மீது எச்சிலை உமிழ்ந்தார். அவரை கைது செய்த போலீஸôர், பௌர்னிமவுத் கிரவுண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி ஜோனதான் புல்லர் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ரிச்சர்ட் எலியட் வாதிடுகையில், ஸ்டீவன் லிகோரிஷ் தன் மீது எச்சிலை உமிழ்ந்ததும் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று போலீஸ் அதிகாரி ஜோ டெர்ரி பயந்தார். அதேபோல், 2 நாள்கள் கழித்து போலீஸ் அதிகாரி அவருக்கு அதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு, பின்னர் நோய்த் தொற்றுக்கு ஆளானார்.

இரண்டு வாரம் நோய்வாய்ப்பட்ட அவர், தன்னால் இந்த வியாதி ஏற்கெனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கும் பரவி விடுமோ என அவர் கவலைப்பட்டதாக வழக்குரைஞர் வாதிட்டார்.

குற்றம்சாட்டப்பட்ட ஸ்டீவன் லிகோரிஷ் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இனவாதத்தால் எழுந்த சுய வெறுப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக அவர் இவ்வாறு நடந்து கொண்டதாகவும், சம்பவத்தின்போது அவருக்கு கரோனா தொற்று ஏதும் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, சம்பவத்தின்போது பதிவான விடியோ ஆதாரங்களைப் பார்வையிட்ட நீதிபதி, போலீஸ் அதிகாரி ஜோ டெர்ரி கருணையுடன் நடந்து கொண்ட போதிலும், ஸ்டீவன் லிகோரிஷ் வேண்டுமென்றே அவர் மீது எச்சில் உமிழ்ந்ததிருக்கிறார். இதற்கு மன்னிப்பே கிடையாது எனக் கூறியதுடன், அவருக்கு 10 வாரங்கள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

Add your comment

Your email address will not be published.

19 − seventeen =