in

போட்டியை காண ஆஸ்திரேலியா துணை பிரதமர் வருகை


Watch – YouTube Click

உலக கோப்பை இறுதி போட்டியை காண ஆஸ்திரேலியா துணை பிரதமர் வருகை

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் கலந்து கொள்கிறார் என பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸும் கலந்துகொள்ளவதாக தகவல் வெளியான நிலையில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகளை கண்காணிக்க குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் காந்திநகரில் உயர்மட்டக் கூட்டத்தை நேற்று முன்தினம் நடத்தினார்.

அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணியும், அதே சமயம் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. இரு அணிகளும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதிபோட்டியில் மொத்த உள்ளனர். 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

திருச்சி மலைக்கோட்டை கார்த்திகை தீபம் திரி

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் | Britain Tamil Europe News