பொய் சொல்லி சென்னைக்கு வந்த மனோ பாலா நடிகரானது எப்படி?
40 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த மனோ பாலா மரணமடைந்தார் அவரை பற்றி பலருக்கும் தெரிந்திடாத சில தகவல்கள் இதோ…
மனோ பாலா 1953 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் பிறந்தவர். திரைப்படத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், பெற்றோர் பேச்சை மீறி… சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு ஓடிவந்தவர் தான் மனோ பாலா.சென்னை திரையரங்குகளில் வெளியாகும் அனைத்து படங்களையும் எப்படியோ காசு சேர்த்து டிக்கெட் வாங்கி பார்த்து விடுவார். அவருக்கு ஒரு கட்டத்தில் நடிகர் கமலஹாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கொண்டார் மனோபாலா.
மனோபாலாவுக்கு திரையுலகின் மீது உள்ள ஆர்வத்தை கண்டு, பிரமித்து போனார் கமல்ஹாசன். எனவே மனோபாலாவுக்கு உதவ வேண்டும் என நினைத்த கமலஹாசன், இயக்குனர் பாரதிராஜாவிடம் அவரை அழைத்துச் சென்று, துணை இயக்குனர் வாய்ப்பை பெற்று தந்தார்., இவர் பணியாற்றிய முதல் திரைப்படம் புதிய வார்ப்புகள் .சினிமா துறையில் சுமார் 48 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 40 படங்களை இயக்கியுள்ளார் மேலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை, உள்ளிட்ட மூன்று படங்களை தயாரித்துள்ளார் அது மட்டும் இன்றி இரண்டு சீரியல்களிலும் மூன்று டிவி தொடர்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு முழுமையான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் கே.எஸ்.ரவிக்குமார் தான். மனோபாலா முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரு சிறு காட்சியில் வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஒளிரச் செய்து விடுவார். பல பிரபலங்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்துள்ள மனோ பாலாவின் மரணம் ரசிகர்களையும், பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஜினி, கமல், விஜய், போன்ற முக்கிய பிரபலங்கள் நேரிலும், அறிக்கை வெளியிட்டும் தங்களின் அஞ்சலியையும் இரங்கலையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings