in

பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக களம் இறங்கிய யாத்திசை |Yathisai entered to compete Ponniyin Selvan

பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக களம் இறங்கிய யாத்திசை
.
கமர்சியல் படங்கள் அதிகமாக வெளிவரும் இந்த நேரத்தில் வரலாற்று பின்னணியை கொண்ட படங்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது..அதற்கு ஏற்றார் போல் ரசிகர்களின் கவனமும் தற்போது வரலாற்று கதைகளின் மேல் படிந்துள்ளது. அதனாலேயே பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது. அதை தொடர்ந்து இரண்டாம் பாகமும் தற்போது வெளியாக இருக்கிறது.இந்நிலையில் அதற்கு போட்டியாக வெளிவந்துள்ள திரைப்படம் தான் யாத்திசை. தரணி ராசேந்திரன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் சக்தி மித்ரன், குரு சோமசுந்தரம், ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மிகக் குறைந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு பிரம்மாண்ட படைப்பை கொடுக்க முடியும் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது இப்படம்.ஏற்கனவே இதன் ட்ரெய்லரை பார்த்து மிரண்டு போன பலரும் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என கூறி வந்தனர்.அதிலும் படத்தின் ப்ரிவ்யூ ஷோவை பார்த்த பிரபலங்கள் ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளி விட்டனர்.இவை எல்லாம் சேர்ந்து படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷனாகவும் மாறியது. அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. அதிலும் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு காட்சியும் பார்ப்பவர்களை மெர்சலாக்கி இருக்கிறது. பாண்டியர்களை பற்றிய கதையாக உருவாக்கி இருக்கும் இப்படம் பொன்னியின் செல்வனுக்கு சரியான போட்டி என்பதில் சந்தேகம் இல்லை.அந்த வகையில் ஆக்சன் காட்சிகளும் மிரட்டும் வகையில் அமைந்திருக்கிறது. இப்படி ஒரு தரமான திரைக்கதையை கொடுத்திருக்கும் இயக்குனரை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆக மொத்தம் திரையரங்குகளில் களை கட்டிக் கொண்டிருக்கும் யாத்திசை இனிவரும் நாட்களிலும் புது சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் இருந்து கண்ணன் விலகுகிறார் | Kannan quit ‘Pandyan Store’ serial

40 வயசுல இந்த விருத நான் எதிர்பார்க்கவே இல்லை – தனுஷ் | Dhanush awarded youth icon award