பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகரித்த பூக்களின் விலை: மல்லிகை ரூ.4000, முல்லை- ரூ.2000, கனகாம்பரம் ரூ.1200  | Pongal: Flower rates increase

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்ததால் நேற்று திண்டுக்கல், நிலக்கோட்டை பூ மார்க்கெட்களில் பூக்களை விலை அதிகரித்து விற்பனையானது.

அதிகபட்சமாக மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.4000, முல்லைப்பூ ரூ.2000 க்கும் விற்பனையானது.

திண்டுக்கல், நிலக்கோட்டை சுற்றுப்பகுதி கிராமங்களில் அதிகபரப்பில் பூ சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயிகள் பூக்களை விற்பனை செய்ய ஏதுவாக திண்டுக்கல், நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்கள் செயல்படுகிறது. திண்டுக்கல்லின் பிற பகுதிகள் மட்டுமின்றி மதுரை, தேனி, கரூர், திருச்சி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலங்களுக்கும் இங்கிருந்து பூக்கள் விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர்.

தற்போது தொடர் மழை காரணமாக பூக்கள் செடியிலேயே அழுகி விடுகின்றன. இதனால் குறைந்த அளவே வரத்து உள்ளது. பொங்கலை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்தாலும், இதற்கேற்ப பூக்கள் வரத்து இல்லாததாலும் விலை அதிகரித்துள்ளது.

நேற்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.4000 க்கும், முல்லைப்பூ ஒரு கிலோ ரூ. 2000 க்கும், கனகாம்பரம் ரூ.1200க்கும் விற்பனையானது. ஜாதிப்பூ ஒரு கிலோ ரூ. ஆயிரத்திற்கும் விற்பனையானது.

விலை அதிகரித்திருந்தாலும் குறைந்த அளவிலான பூக்களே மழையில் சேதமடையாமல் கிடைப்பதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி இந்து தமிழ் திசை