in

பெற்றோர் கேள்விக்கு மாணவன் விபரீத முடிவு


Watch – YouTube Click

செஞ்சி அருகே ஏழாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை பெற்றோர் பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை ஏன் எடுக்கின்ற கேள்விக்கு மாணவன் விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்துரு.
இவர் பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை எடுத்த நிலையில் அவரது பெற்றோர்கள் பள்ளி மாணவன் சந்துருவை அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுக்கிற என்று கேள்வி எழுப்பி திட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஏழாம் வகுப்பு பள்ளி மாணவன் சந்துரு இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் உடனடியாக சந்துருவின் பெற்றோர்கள் அவனை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது அங்கு மருத்துவர்கள் அவர் முன்னதாக இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து நல்லான் பிள்ளைபெற்றாள் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி செஞ்சி மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

பாபர் மசூதி இடிப்புதினமான இன்று மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு

அம்பேத்கர் நினைவு தினம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலர் தூவி மரியாதை