பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மத பேதமின்றி சுகாதார பொங்கலிட்ட பொதுமக்கள் | pongal celebrations

 

செய்திப்பிரிவு

Published : 12 Jan 2021 03:14 am

Updated : 12 Jan 2021 08:10 am

 

Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 08:10 AM

pongal-celebrations
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நடை பெற்ற சுகாதார பொங்கல் விழாவில் மத பேதமின்றி பொங்கலிட்ட பொதுமக்கள்.

சென்னை

சென்னையில் நீர்வழித் தடங்கள் மற்றும் சாலையோர பகுதிகளின் அருகில் வசித்து வந்த குடும்பங்கள் பெரும்பாக்கத்தில் உள்ளகுடிசை மாற்று வாரிய குடியிருப்புபகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர். அப்பகுதிகளில் பொதுமக்கள் தூய்மையை கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்மற்றும் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில்தூய்மை, கழிவு மேலாண்மை, சுகாதார விழிப்புணர்வு மற்றும் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது.

இதில், அரசு அதிகாரிகள் மதபேதமின்றி அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுடன் ஒன்றுகூடி சுகாதார பொங்கலிட்டனர். தூய்மை தொடர்பாக நடத்தப்பட்ட கோலப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு குடிசை மாற்றுவாரிய நிர்வாக பொறியாளர் சேகர் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

நன்றி இந்து தமிழ் திசை