பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை அபிராமி
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் அபிராமி. இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை அளித்துள்ளார். அதாவது பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளார் அபிராமி.இவர் கமல் ஜோடியாக நடித்த ‘விருமாண்டி’ படத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சினிமாவிற்கு கேப் விட்டார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மாதவனின் ‘மாறா’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அபிராமி கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் இவர் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும் தன்னுடைய கணவர் ராகுலும் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அபிராமி பகிர்ந்துள்ள பதிவில், ‘நண்பர்களே நானும் ராகுலும் இதனை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.நாங்கள் ஒரு பெண் குழந்தைக்கு தாய் தந்தையாக மாறி இருக்கிறோம். கடந்த வருடம் இவளை நாங்கள் தத்தெடுத்து கொண்டோம். தாயாக இந்த அன்னையர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்கிறேன். எங்கள் குழந்தைக்கு ‘கல்கி’ என பெயர் வைத்துள்ளோம். அவரின் இந்த பதிவிற்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

வந்துட்டேன் திரும்பி வந்துட்டேன் – நடனமாடிய புகை படத்தை வெளியிட்டார்ரோபோ ஷங்கர்

GIPHY App Key not set. Please check settings