புஷ்பா 2- படம் நிறுத்தப்பட்டது
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் ‘பான் இந்தியா’ படமாக வெளியான ‘புஷ்பா’ வெற்றிகரமாக ஓடி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் சமந்தா ஆடிய கவர்ச்சி நடனம் பரபரப்பாக பேசப்பட்டது. புஷ்பா 2-ம் பாகம் உருவாகும் என்று ஏற்கனவே அறிவித்து படப்பிடிப்பை கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடத்தி வந்தனர். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. படப்பிடிப்பை விரைவில் முடித்து திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இதுவரை படமாக்கிய காட்சிகளை இயக்குனர் போட்டு பார்த்தபோது அவை திருப்தியாக இல்லை என்றும், இதனால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டார் என்றும் தகவல் பரவி உள்ளது மீண்டும் முதலில் இருந்தே படப்பிடிப்பை நடத்தலாமா? என்று ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

நெதர்லாந்தில் ரயில் மீது கிரேன் மோதி ஒருவர் பலி

GIPHY App Key not set. Please check settings