புருஷனுக்காக promotion களத்தில் இறங்கிய பொண்டாட்டி
நடிகர் சாந்தனு பாக்யராஜ் வேட்டிய மடிச்சு கட்டு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பின்பு, சக்கரகட்டி என்னும் படத்தின் மூலம் ஹீரோவானார். முதல் படத்திலேயே சாந்தனுவிற்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. நல்ல நடிப்பு திறமை மற்றும் நடனத் திறமை இருந்தும் சாந்தனு பாக்யராஜ் இன்றுவரை ராசி இல்லாத நடிகராகவே பார்க்கப்படுகிறார். வருடத்திற்கு ஒரு படம், இரண்டு படம் என இவர் நடித்தாலும் எந்த ஒரு வெற்றியையும் அல்லது சினிமாவில் இவருக்கான அடையாளத்தையும் இன்று வரை கொடுக்கவில்லை. சாந்தனு பாக்யராஜிற்கு மிகப்பெரிய வாய்ப்பாக கிடைத்தது தான் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். படத்தில் கமிட் ஆனதிலிருந்தே சாந்தனு கொஞ்சம் ஓவராக ஆடிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஓவராக பில்டப் பேசிய அளவுக்கு படத்தில் அவரது கதாபாத்திரம் கனமாக இல்லை. இதனால் நெட்டிசன்களிடையே பல ட்ரோல்களுக்கு உள்ளானார் இவர். இவர் சமீபத்தில் இராவண கூட்டம் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் கிடைத்த ஏமாற்றம் இவருடைய சமீபத்திய பேட்டிகளிலேயே நன்றாக தெரிகிறது. படத்தைப் பற்றி பில்டப் எதுவும் பேசாமல் ரொம்பவும் தன்னடக்கமாகவும், இந்த படத்தில் நடிப்பதற்குள் அவர் பட்ட கஷ்டங்களை பற்றியும் பேசி வருகிறார். தற்போது அவருடைய பிரமோஷன் வேலைகளை கீர்த்தி சாந்தனு செய்து வருகிறார்.
சாந்தனுவின் காதல் மனைவி கீர்த்தி சாந்தனு பிரபல தொகுப்பாளினி மற்றும் நடன ஆசிரியரும் ஆவார். இவர் இராவண கூட்டம் திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு தன்னுடைய குழு உடன் ஆடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தன் கணவரின் படம் வெற்றி பெறுவதற்காக கீர்த்தி இதுபோல் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
GIPHY App Key not set. Please check settings