in

புயல் சின்னம், கடல் சீற்றம், காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு


Watch – YouTube Click

புயல் சின்னம், கடல் சீற்றம், காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

புயல் சின்னம், கடல் சீற்றம், சூறைக்காற்று காரணமாக மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து 25 மீனவ கிராமத்தைச் சேர்ந்த 5000ம் மேற்பட்ட நாட்டுபடகும் 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் 3வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன் பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிப்பு.

தெற்கு வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டது. ஏற்கனவே வானிலை மையம் எச்சரிக்கையைத் தொடர்ந்து நாகை மாவட்ட மீன்வளத்துறையினர் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என தடை விதித்தனர்.

இதனால் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், செருதூர், வேதாரணியம், ஆற்காட்டுதுறை உள்ளிட்ட 25 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் இன்று 3வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை அவர்களது படகுகளை துறைமுகங்களிலும் அந்தந்த மீனவ கிராம கடற்கரை பகுதிகளிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

மீனவர்கள் மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். மீன் வரத்து இல்லாததால் நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இருண்ட வானமும், தூரல் மழையும், வெயிலும் அவ்வப்போது மாறி மாறி வந்து செல்கிறது


Watch – YouTube Click

What do you think?

கோழி கடையில் புகுந்து திருட முயன்ற வட மாநில இளைஞர் |northern youth state to steal from chicken shop

அடைக்கலம் காத்த அய்யனார் ஆலய மஹா கும்பாபிஷேகம் |Maha Kumbabhishekam at the Ayyanar Temple