புது பிசினஸ் தொடங்கிய காஜல் அகர்வால்… வாழ்த்திய கணவர் – வைரலாகும் போட்டோஸ்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், புதிதாக பிசினஸ் ஒன்றை தொடங்கி உள்ளதால் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இவர் கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சலு என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்தாண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் பிசியாகி உள்ளார். தற்போது நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், தற்போது நடிகை காஜல் அகர்வால் புதிதாக பிசினஸ் ஒன்றை தொடங்கி உள்ளார். அதற்கான அறிமுக நிகழ்ச்சியும் அண்மையில் நடைபெற்றது. அதன்படி நடிகை காஜல் அகர்வால் ‘காஜல் பை காஜல்’ என்கிற அழகு சாதன பொருள் விற்பனையை தொடங்கி இருக்கிறார். கண் மை விற்பனையகமான இதன் தொடக்க விழாவுக்கு தன் காதல் கணவர் கவுதம் கிச்சலுவை தான் சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தார் காஜல் அகர்வால்.காஜலின் இந்த புது பிசினஸ் தொடக்க விழாவுக்கு வந்த கவுதம் கிச்சலு, தன் காதல் மனைவிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து நெகிழ வைத்துள்ளார். இந்த பிசினஸ் தொடங்க வேண்டும் என்பது காஜல் அகர்வாலுக்கு நீண்ட நாள் கனவாக இருந்ததாம். அதனை நனவாக்க உதவிய தன் கணவர் கவுதம் கிச்சலுவுக்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings