in

புதுச்சேரி பல்லுயிர் பேரவையும் வனம் மற்றும் வனவிலங்கு துறையும் இணைந்து சர்வதேச பல்லுயிர் தின விழா

புதுச்சேரி பல்லுயிர் பேரவையும் வனம் மற்றும் வனவிலங்கு துறையும் இணைந்து சர்வதேச பல்லுயிர் தின விழா

புதுச்சேரி பல்லுயிர் பேரவையும் வனம் மற்றும் வனவிலங்கு துறையும் இணைந்து சர்வதேச பல்லுயிர் தின விழாவில், வனத்துறைக்கு புதிய சின்னத்தை முதலமைச்சரங்கசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

காரைக்காலில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை பத்திரமாக கடலுக்கு அனுப்பிய வனத்துறை ஊழியர்கள் மற்றும் மீனவர்கள் 20 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் மற்றும் தலா பத்தாயிரம் ரூபாயை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி பல்லுயிர் பேரவையும், புதுச்சேரி வனம் மற்றும் வனவிலங்கு துறையும் இணைந்து சர்வதேச பல்லுயிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்த அவர்,
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், வேளாண்துறை மற்றும் வனத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி வனத் துறையின் சின்னத்தை அறிமுகம் செய்து வைத்தார்.மேலும் விழாவில் 14 கிராம பஞ்சாயத்துக்கள் மற்றும் 1 நகராட்சியில் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் துவங்கப்பட்டு அதற்கு செயலாக்க நிதியாக ஒவ்வொரு பஞ்சாயத்து குழுக்களுக்கு ரூ.60,000ம் நகராட்சி குழுவிற்கு ரூ.1 இலட்சமும் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 13.05.2023 அன்று காரைக்கால் துறைமுகப்பகுதியில் 45 அடி நீளமுள்ள – 15 டன் எடையுள்ள எண்ணெய்த்திமிங்கலம் கரை ஒதுங்கியது. அது இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில் வனக்காப்பாளரும் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளருமாகிய வஞ்சுளவல்லி தலைமையில் ஆய்வு செய்ததில் அது உயிருடன் இருப்பது தெரியவந்தது. உடனே, துரித நடவடிக்கை எடுத்து அங்கிருந்த பட்டினச்சேரி மீனவர்கள், துறைமுக அலுவலர்கள் மற்றும் கப்பல் படை உதவியுடன் அந்த அறிய உயிரினம் மீட்கப்பட்டு கடலில் விடுவிக்கப்பட்டது.

தொடர்ந்து 8 மணி நேரம் போராடி திமிங்கலத்தை கடலுக்கு அனுப்பியதன் காரணமாக பணியில் ஈடுபட்டிருந்த 20 நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயை சன்மானமும் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் பல்லுயிர் ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமற்ற மாத்திரை வழங்கிய சம்பவம் | Pondicherry Siva News

புதுச்சேரியில் கள்ளச்சாராயம் பெருகிவிட்டது முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு | Narayanasamy