புதுச்சேரி : பட்டபகலில் சட்டை அணியாமல் சாமியார் போர் அணிந்து இருசக்கர வாகனம் திருடிய வாலிபர்…
புதுச்சேரி லாஸ்பேட்டையில் பட்டபகலில் சட்டை அணியாமல் சாமியார் போல் வேடம் அணிந்து நாடகமாடி இருசக்கர வாகனத்தை திருடி சென்ற போலி ஆசாமியை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு லாஸ்பேட்டை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே இரு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நூதன முறையில் இருசக்கர வாகனங்களை திருடி செல்லும் நபர்களை போலீசார் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் பின்புறத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டு வாசலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அவ்வழியாக வந்த நபர் ஒருவர் சட்டை அணியாமல் சாமியார் போல் வேடம் அணிந்து அந்த பகுதி முழுவதும் சுற்றி திறிந்துள்ளார். அப்போது திடீரென ஒரு வீட்டு வாசலில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பட்டப் பகலில் லாவகமாக திருடி கொண்டு செல்கிறார். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருட்டு ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings