புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 12 டயாலிசிஸ் இயந்திரங்களை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு புதியதாக அமைக்கப்பட்டிருந்தது.இதன் திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி டயாலிசிஸ் சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தார். இதில் முதல் கட்டமாக தடையில்லா மின்சாரம் வழங்கும் வசதியுடன் டயாலிசிஸ் இயந்திரங்கள் அரசு நிதி மற்றும் நான்கு தனியார் நிறுவனங்களில் நிதி உதவியுடன் நிறுவப்பட்டு உள்ளன உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி கூறும்போது..
ஏழை எளிய மக்களுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும் வகையில் தனியா நிறுவன பங்களிப்புடன் 12 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது மேலும் அடுத்த கட்டமாக புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் வெகுவிரைவில் நிறுவப்பட உள்ளன என்றும் மதர் தெரசா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இயக்குனர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட மருத்துவர்கள் மருத்துவ கல்லூரி மாணவிகள் மாணவர்கள் ஊழியர்கள் என அனைவரும் ஏராளமாக கலந்து கொண்டனர்.
GIPHY App Key not set. Please check settings