புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருந்தும் படிக்க 7.5% இட ஒதுக்கீடு அன்பழகன் பேட்டி
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க 7.5% இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த வேண்டும். கோரிக்கை ஏற்காவிட்டால் கூட்டணிக் கட்சி என்று பாராமல் அதிமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேட்டி.
துணை நிலை ஆளுநர் தனியார் புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து 50 சதவீத இட ஒதுக்கீடு அரசு பெற உடனடி சட்டம் இயற்ற வேண்டும். அதிமுக அன்பழகன் வேண்டுகோள்
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியின் மக்கள் நலன் சார்ந்த திட்ட பயன்கள் மற்றும் ஆட்சியின் செயல்பாடுகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் தவறான விரும்பத்தகாத அறுவறுக்கத்தக்க அனாகரீகமான பொய்யான தகவல்களுக்கு துணைநிலை ஆளுநர் பதிலளிப்பதை நிறுத்திகொள்ள வேண்டும்..
புதுச்சேரியில் தொடர்ந்து தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் எந்த அரசாக இருந்தாலும் தொடர்ந்து தவறை இழைத்து வருகிறது. புதுச்சேரியில் ஏற்கனவே செயல்பட்ட 4 நிகர்நிலை பல்கலைக்கழத்தில் 20 சதவீத அரசு இடஒதுக்கீடாக பெறப்பட்டு வந்தது. கடந்த கால திமுக காங்கிரஸ் அரசு கையூட்டு பெற்றுக்கொண்டு அனைத்து சீட்டுகளையும் இழந்தது.
இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் 3 தனியார் மருத்துவ கல்லூரியில் மொத்தமுள்ள 450 இடங்களில் சட்டப்படி 50 சதவீதம் 225 இடங்களை அரசு இடஒதுக்கீடாக பெற வேண்டும். மேலும் இந்த ஆண்டு ஒரு மருத்துவ கல்லூரிக்கு 100 சீட்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
எனவே தேசிய மருத்துவ கவுன்சில் 2020-ன் அறிவிப்பின் படியும், சுப்ரீம் கோரட்டின் உத்தரவின் அடிப்படையில் மாநில அரசுக்கு தனியார் மருத்துவ கல்லூரி 50 சதவீதம் இடத்தை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசு மருத்தவ கல்லூரியில் என்ன கட்டணம் பெறப்படுகிறதோ அதே கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் 50 சதவீதம் இடங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 275 இடங்களை பெற வேண்டும் என ஒரு உத்தரவு போட வேண்டும். அதைவிடுத்து மருத்துவ கல்லூரி உரிமையாளர்களை அழைத்து பேசுவது சரியானது அல்ல என கூறியவர்.
ஆளுநர் தமிழிசை ஒரு மருத்துவர் என்பதால் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தனியார் மருத்துவ கல்லூரியில் 50 சதவீத இடங்களை பெற ஒரு அவசர உத்தரவினை போட வேண்டும். அப்படியில்லை என்றால் அவரும் தனியார் மருத்துவ கல்லூரிக்கு ஆதரவாக இருக்கிறார் என்ற நிலைபாடு மக்கள் மத்தியில் தோன்றும்.
தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 3000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ கல்லூரியில் படித்து வருகின்றனர்.
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
அப்படி இல்லை என்றால் கூட்டணி கட்சி என்று பாராமல் கழகத்தின் அனுமதி பெற்று அரசை எதிர்த்தும், அரசின் தவறான செயல்பாட்டை கண்டித்து அதிமுக சார்பில் மாணவர்களுக்காக அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.
GIPHY App Key not set. Please check settings