in

புதுச்சேரியில் முதன்முறையாக ஐபிஎல்


Watch – YouTube Click

புதுச்சேரியில் முதன்முறையாக ஐபிஎல் (IPL)கிரிக்கெட் போட்டிக்கு ஏலம் எடுப்பது போல் பாகூர் கிராமத்தில் பாகூர் பிரீமியர் லீக்(BPL) போட்டிக்கான கிரிக்கெட் வீரர்களை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்

கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் பிரபலமானதாக ஐபிஎல் மற்றும் தமிழகத்தின் டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உள்ளது.

அந்த வகையில் புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமையை ஒக்குவிக்கும் வகையில் பாகூர் கிராமத்தில் பாகூர் பிரீமியர் லீக் சீசன் 2 என்ற கிரிக்கெட் போட்டிகள் முதல் முறையாக நடைபெற உள்ளது.

பிரம்மாண்டமாக துவங்க உள்ள இந்த லீக் போட்டிக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் எடுக்கும் முறை நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

எட்டு அணிகள் பிரிக்கப்பட்டு அந்தந்த அணிகளுக்கு உரிமையாளர்களாக பாகூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அணியின் உரிமையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு அணிக்கும் 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஐபிஎல் போட்டியில் ஏலம் கேட்பது போல் எட்டு அணி உரிமையாளரும் வட்டமேசை அமைத்து ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பெயர் சொல்ல சொல்ல அவர்கள் பெயரை போர்டில் எழுதி வைத்து அந்தந்த அணிகள் ஏலம் எடுத்தனர்.

சுமார் 4 லட்சம் வரை வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் அதிகபட்சமாக ரூ.10,000, ரூ.15,000, ரூ.8000, ரூ.6000 என்று கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் அதிகபட்சமாக ஏலமாக எடுக்கப்பட்டனர்.

இதற்கான போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 13-ஆம் தேதி துவங்கி 20-ஆம் தேதி வரை மொத்தம் எட்டு நாட்கள் மிக பெரிய அளவில் நடைபெறவிருக்கின்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திமுக எம்.எல்.ஏ செந்தில்குமார் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்தார். மற்றும் இவ்விழாவினை BPL குழுவினர் மிகச் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

விழாக்குழுவினர் கூறியதாவது இம்முயற்சி கிராமப் பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களையும் டிஎன்பிஎல், ஐபிஎல் போன்ற போட்டிகளில் பங்கேற்க வைப்பது இதற்கான ஒரு சிறிய முயற்சியாக கிராமப்புற விளையாட்டு வீரர்களின் நலனுக்காக இந்த bpl போட்டி துவங்கப்பட்டுள்ளது என்றார்.


Watch – YouTube Click

What do you think?

2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை