புதுச்சேரியில் ட்ரோன் மூலம் விதை விதைத்து விவசாயிகளுக்கு பயிற்சி .
புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம், ஆத்மா, வில்லியனூர் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அறிவியல் நிலையமும் இணைந்து “விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு செயல்விளக்கம்” குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் பெருந்தலைவர் காமராஜர் அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது. வில்லியனூர் வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் தலைமை உரை ஆற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய பூச்சிகள் துறை தொழில்நுட்ப வல்லுனர் விஜயகுமார் நோக்க உரையாற்றினார்.
ட்ரோன் உரிமையாளர் கார்த்திகேயன், ட்ரோன் மூலம் விதை விதைப்பது, நானோ யூரியா உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் தெளிப்பதை பற்றி செயல் விளக்கம் செய்து காட்டினர். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பகுதியை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் வில்லியனூர், தமிழ்ச்செல்வன், ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் செய்திருந்தனர்.
GIPHY App Key not set. Please check settings