புதுச்சேரியில் கள்ளச்சாராயம் பெருகிவிட்டது முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு | Narayanasamy
புதுவை மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் } பாஜக கூட்டணி அரசை ஆட்சியிலிருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர் என்று முன்னாள் முதல்வர் . நாராயணசாமி கூறினார்.காரைக்காலில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,கர்நாடகத்தில் பாஜக அரசின் ஊழல், வளர்ச்சியின்மை உள்ளிட்ட காரணங்களால் அக்கட்சி தோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அளித்த ஆதரவு, தேசிய அளவில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். பிரதமர் முதல்முறை அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியவில்லை. இந்தநிலையில் தற்போது 2 ஆயிரம் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு நிர்வாகம் செய்யத் தெரியவில்லை. அதிகாரிகள் தரும் கோப்பில் கையொப்பமிடுகிறார்.அவரது ஆட்சியில் மது புழக்கம் பெருகி புதுவையின் கலாசாரம் சீரழிந்துவிட்டது. ரெஸ்டோ பார் என்ற திட்டத்தில் உரிமம் வழங்குவதில் முதல்வர், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக குற்றம்சாட்டினேன். அதற்கு எந்த விளக்கமும் முதல்வரிடமிருந்து வரவில்லை. புதுவை முதல்வர், அமைச்சர்களுக்கு காரைக்கால் மாவட்டத்தின் வளர்ச்சியில் அக்கறையில்லை. காரைக்கால் அரசு மருத்துவமனை சீர்கெட்டுவிட்டது. வேளாண்துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் காரைக்காலில் 10 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இதுகுறித்து புதுவை கல்வி அமைச்சர் கவலைப்படுவதாக தெரியவில்லை.கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் இருவரை பதவி நீக்க பாஜக தலைவர் அண்ணாமலை கோருகிறார். புதுவையிலும் கள்ளச்சாராயம் பெருகியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர், பாஜக அமைச்சரை பதவி நீக்க அண்ணாமலை வலியுறுத்துவாரா ?
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் } பாஜக கூட்டணி அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்கள் இந்த கூட்டணி அரசை அகற்ற தயாராகிவிட்டனர் என்றார் முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி.
GIPHY App Key not set. Please check settings