புதுச்சேரியில் ஓபிஎஸ் ஆதரவு பெற்ற நபர்கள் அதிமுக கொடி மற்றும் பெயர்களை பயன்படுத்த தடை
புதுச்சேரியில் ஓபிஎஸ் ஆதரவு பெற்ற நபர்கள் அதிமுக கொடி மற்றும் பெயர்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். டிஜிபியிடம் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் மனு..
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. கட்சியை யார் கையகப்படுத்துவது சம்பந்தமாக மோதல் போக்கு ஏற்பட்டு வந்த நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இபிஎஸ் தரப்பில் பொதுக்குழு கூட்டி அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.மேலும் தனது மெஜாரிட்டியை காண்பித்து நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமும் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து அறிவித்தது.
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுகவின் கொடி மற்றும் பெயர்களை பயன்படுத்தி வருவதற்கு கடும் எதிர்ப்புக் எழுந்து வருகிறது. தமிழகத்தில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மாநில டிஜிபி இடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புதுச்சேரியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக கொடி, பெயர்கள், பயன்படுத்த கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் டிஜிபி மனோஜ் குமார் லாலிடம் மனு அளித்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்.
அதிமுக இபிஎஸ் இன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள். திமுகவின் பி டீமாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ் இன் ஆதரவாளர்கள் புதுச்சேரியில் கட்சி கொடி, கட்சியின் பெயர் பயன்படுத்தக் கூடாது. மாநில செயலாளர் என்று அறிக்கையை வெளியிடுவது, செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுப்பது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் .மீறி பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் என்றும் இது சம்பந்தமாக புதுச்சேரியில் இருக்கும் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்படும் என்றார்.
GIPHY App Key not set. Please check settings