பிரெக்ஸிட்: பிரிட்டன் வணிக ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் ஆதரவு

பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய ஐரோப்பிய யூனியன்- பிரிட்டன் இடையிலான வணிக ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய பாராளுமன்ற அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த பிராந்தியத்தில் வரி மற்றும் ஒதுக்கீடு இல்லாத வணிகம் தொடர்வதற்கு இது முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய யூனியன்- பிரிட்டன் இடையே கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்காலிக வணிக ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்துவந்த நிலையில், தற்போது நிரந்தர ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 660 பேர் ஒப்பந்தத்துக்கு ஆதரவாகவும், 6 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 32 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை கொண்டுவந்து எதிர்காலத்தின் மீது நாம் கவனம் செலுத்த இந்த வாக்கெடுப்பு உதவியதாக பிரிட்டனின் பேச்சுவார்த்தை குழு தலைவர் லார்ட் ப்ராஸ்ட் தெரிவித்தார். மேலும், இந்த ஒப்பந்தம் நீண்ட நெடிய பயணத்தின் இறுதி அடி என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரிட்டனின் முதன்மையான வணிக கூட்டாளியாக விளங்கும் ஐரோப்பிய யூனியன் உடனான் புதிய உறவில் இந்த ஒப்பந்தம் நிலைத்தன்மையைக் கொண்டு வந்திருப்பதாக பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பின் இறுதி நிலவரம் புதன்கிழமை வெளியானது. இதற்கு ஐரோப்பிய கமிஷன் தலைவர் உருசுலா வோன் டெர் லியன் வரவேற்பு அளித்திருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

twenty + 13 =