in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (02. 12. 2023) | Britain Tamil Europe News | UK News


Watch – YouTube Click

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள்

கொரோனா விவகாரத்தில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்கிறார்

இங்கிலாந்தில் கொரோனா ஆட்டி படைத்த போது போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவி வகித்தார். அப்போது அவர் கொரோனா விதிமுறைகளை மீறி மது விருந்து நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணைக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அந்தக் குழுவின் முன்பு போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளார். அப்போது அவர் விதி மீறலுக்காக மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா விசாரணை தான் முன்னாள் அமைச்சரின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது

பிரிட்டனில் கொரோனா பரவிய போது அமைச்சராக இருந்தவர் மேத்யூ ஹான் காக். இவர் விதிமீறலில் ஈடுபக்கதற்காக பதவியை ராஜினாமா செய்தார். இந்தச் சூழ்நிலையில் அவரிடம் விசாரணை குழு கொரோனா விதி மீறல் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையில் அவர் குற்றவாளி என்பது நிரூபணம் ஆகிவிட்டால் அவர் இனி சிறையில் கம்பி என்ன வேண்டிய நிலைமை ஏற்படும். இதன்மூலம் மேத்யூ அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.

குடும்ப நல நீதிமன்ற நீதிபதியை சரமாரியாக அடித்து உதைத்த இளைஞர்

இங்கிலாந்தின் சவுத் வார்க் கிரவுன் குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் பணியாற்றி வருகிறார். இங்கு ஒரு குடும்ப பிரச்சனை விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது மனுதாரர் ஒருவர் திடீரென ஆத்திரம் அடைந்து நீதிபதியை சரமாரியாக தாக்கினார்.

இதனால் பலத்த காயமடைந்த நீதிபதி கோர்ட் வளாகத்தில் கத்தி கூச்சல் போட்டார். உடனடியாக அங்கு இருந்த அனைவரும் நீதிபதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நீதிபதியை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

எடின்பரோ பகுதியில் குண்டு வெடித்ததில் இருவர் காயம்

இங்கிலாந்தின் எடின்பரோ நகரில் பாபர் பன் பகுதி அருகே நேற்று ஒரு வீட்டில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் அந்த வீட்டில் இருந்த இருவர் பலத்த காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளை அகற்றி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு காரணமான நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

இங்கிலாந்தில் ஐஸ் கட்டி உருகும் அபாயம்

இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் இந்த வாரத்தில் பணிபுரிவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போல பனிக்கட்டி உருகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்தின் கிழக்கு பகுதிகளும் ஸ்காட்லாந்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்காட்லாந்து நார்த் ஈஸ்ட் பகுதியில் 10 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல பிரிட்டன் முழுவதும் இரவு நேரத்தில் மைனஸ் 4 டிகிரி முதல் மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்று கூறப்படுகிறது.

பழம்பெரும் நடிகை மரணம்

பிரிட்டனின் பழம்பெரும் நடிகை பிரிகிட் பார்ஷித் வயோதிகம் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83.

எடின்பரோ நகரில் பிறந்தவர் 1971 ஆம் ஆண்டில் சினிமா துறையில் நுழைந்து பல்வேறு படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர் மிகவும் பிரபலமானார்.

அவரது மறைவிற்கு பிரிட்டன் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இத்தாலியில் சிறப்பு வாய்ந்த கோபுரத்துக்கு சீல்

இத்தாலியின் போலோக்னா நகரில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கரிசன்டா டவர் அமைந்துள்ளது. அந்த டவர் 154 அடி உயரம் உள்ளது.

பழமை வாய்ந்த இந்த டவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடலாம் என்ற அச்சம் அங்கு ஏற்பட்டு இருப்பதால் அதற்கு அதிகாரிகள் என்று சீல் வைத்தனர். மேலும் அந்த தவறை சுற்றியுள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பைசா கோபுரத்துக்கு நிகராக இந்த கோபுரம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

தொழில்நுட்பக் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் தென்னிந்திய பல்கலைக்கழக அளவிலான யோகாசன போட்டிகள்

ஆளுநர் மாளிகையில் நடந்த அசாம் மாநில உதய நாள் விழா