in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் 20.11.2023 | Britain Tamil Europe News | UK News


Watch – YouTube Click

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் 20.11.2023 | Britain Tamil Europe News | UK News

பாலியல் பலாத்கார வழக்கில் பிரிட்டன் நடிகரிடம் போலீசார் விசாரணை

பிரிட்டனை சேர்ந்த காமெடி நடிகர் ரசல் பிராண்ட். இவர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அவரிடம் போலீசார் நேற்று துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது தன் மீதான குற்றச்சாட்டை ரசல் பிராண்ட் திட்டவட்டமாக மறுத்தார்.

சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலை சந்தித்தேன் வேல்ஸ் நடிகை பேட்டி

நான் சிறு வயதாக இருந்தபோதே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன் என்று வேல்சை சேர்ந்த நடிகை சேரா கிராஃகோர்ட் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அதிர்ச்சியிலிருந்து தன்னால் இன்னும் மீண்டு வர முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அவருக்கு தற்போது 57 வயதாகிறது. திருமணம் ஆகி 3 பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் வரியை குறைக்க அமைச்சர் முடிவு

பிரிட்டனில் அடுத்த வாரம் வசந்தகால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெறிமி ஹன்ட் தாக்கல் செய்கிறார். அப்போது வரி குறைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல வர்த்தக வரியும் குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வரியை குறைக்க போவதாக உறுதியாக தெரிவித்துள்ளார்.

கான்வாலில் நில அதிர்வு

இங்கிலாந்தின் கான்வால் நகரில் நேற்று திடீரென நில அதிர்வு ஏற்ப ட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி பொதுவெளியில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே கான்வாள் நகரில் ரிட்டர் அளவுகோலில் 2.7 அலகுகளாக நில அதிர்வு பதிவானதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

போலீஸ்காரர்களை தாக்கியவர் கைது

இங்கிலாந்தின் பர்மிங்காம் ஸ்ப்ரிங் ஃபீல்டு அருகே யார்ட்லி உட் சாலை அருகே இரண்டு போலீசார் சமீபத்தில் மர்ம நபர் ஒருவரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர். இதனால் பலத்த காயம் அடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் வீடு திரும்பினர்.

ஏற்கனவே போலீசாரை தாக்கிய ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டார். அவர் என்ன காரணத்துக்காக போலீசாரை தாக்கினார் என்று தெரியவில்லை. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இங்கிலாந்து நடிகர் மறைவு

இங்கிலாந்து நடிகர் ஜோஸ் ஆக்லாந்த் வயோதிகம் காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. வயோதிகம் காரணமாக அவர் படுக்கையிலேயே மரணத்தை தழுவியதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஜோஸ் ஆக்லாந்த் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவரது மனைவி ரோஸ்மேரி கடந்த 2002 ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார்.

கிளாஸ்டன்பரி திருவிழாவுக்கான டிக்கெட் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது

இங்கிலாந்தில் ஆண்டுதோறும்
கிளாஸ்டன்பரி நிலா கோலாலமாக கொண்டாடப்படுவது. இந்த விழா அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதற்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த விழாவில் அதிகபட்சமாக 21 ஆயிரம் பேர் வரை பங்கேற்கலாம்.
இதற்கான டிக்கெட் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.


Watch – YouTube Click

What do you think?

தஞ்சை அருகே நண்பரின் அக்கா மகளை கடத்தி

super singer 9 juniors .. இன் 4 காவது finalist இவர்கள் தான்