பிரிட்டனை உளவுபார்க்கும் சீனா
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் கொண்டு வரப்படவுள்ள கொள்முதல் மசோதாவில் இந்த அம்சம் இடம் பெற்றுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வான் பகுதியில் பிரம்மாண்டமான சீன உளவு பலூன் கடந்த பிப்ரவரி மாதம் கண்டறியப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த உளவு பலூன் அமெரிக்க வான் எல்லைக்குள் புகுந்து பல நாள்களாக சுற்றி வந்ததாகவும், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பகுதிகளின் மேலே பறந்து சென்றதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகன் கூறியது. பின்னர், அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, அந்த பலூன் வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்டது எனவும், வழிதவறி அமெரிக்க வான் எல்லைக்குள் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தது.
எனினும், அந்த பலூனின் சிதறல்களை ஆய்வு செய்ததில் அது உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டது உறுதியானதாக அமெரிக்கா கூறியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சர்வதேச நாடுகளை சீனா ரகசியமாக உளவு பார்ப்பது அதிகரித்து வருவதாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அச்சம் தெரிவித்தன.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும், உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு சீனாதான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று அண்மையில் எச்சரித்திருந்தார்.
இந்த சூழலில், சீன அரசால் உளவு பார்க்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை அகற்ற பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings