பிரிட்டனுக்கு தமிழ் சமூகத்தின் பங்களிப்பு அளப்பரியது: பிரதமர் போரிஸ் ஜான்ஸன் பொங்கல் வாழ்த்து | UK: PM Boris Johnson greets Tamil diaspora on Pongal

பிரிட்டனுக்கு தமிழ் சமூகத்தினர் செய்த பங்களிபபு அளப்பரியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ட்விட்ரில் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ட்விட்டரில் பதிவி்ட்ட வீடியோ வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:

“ நம்முடைய அருமையான பிரிட்டன் தமிழ் சமூகத்தினர், உலகம்முழுவதும் பரந்திருக்கும் தமிழ் சமூகத்தினர் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகள்.

உங்கள் நண்பர்கள், குடும்பத்தாருடன் சேர்ந்திருக்கும் நாளாக இது அமையட்டும். இன்னும் கொண்டாடவும், எதிர்நோக்கி இருக்கவும் நிறைய இருக்கிறது என நம்புகிறேன்.

தித்திப்பான பொங்கல் வைப்பதோடு இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாக இந்தநாளை கொண்டாடுவீர்கள். பாரம்பரியமாக தைத் திருநாள் அறுவடையை வரவேற்கும் நாளாக, கொண்டாடப்படுகிறது.

தமிழ் சமூகத்தினர் பிரிட்டனின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்பவர்களாக, பள்ளிகளில் ஆசியர்களாக, மருத்துவத்துறையில் முக்கியப் பொறுப்புகளிலும், நோயாளிகளை கனிவுடன் சிகிச்சையளிக்கும் பிரிவிலும் இருக்கிறாகள். தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது, மிகப்பெரிய மாற்றத்தைச் செய்திருக்கிறது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த பூமியில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், ஒரு குடும்பத்தை வளர்ப்பதற்கும் மிகப் பெரிய இடமாக இந்த தேசத்தை மாற்றுவதற்கான நம் திட்டங்களை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.

அருமையான தமிழ்சமூகத்துக்கு எனது பெரு நன்றிகளை தெரிவித்து,பொங்கல் பண்டிகையையும் அடுத்து வருகின்ற நாட்களையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வாழ்த்துகிறேன். பானையில் பொங்கும் இனிப்பான பொங்கலைப் போன்று மகிழ்ச்சியும், செழிப்பும் ஆண்டுமுழுவதும் இருக்கட்டும்”

இவ்வாறு போரீஸ் ஜான்ஸன் தெரிவித்தார்.

நன்றி இந்து தமிழ் திசை