பிரிட்டனில் 4ஆவது கரோனா தடுப்பூசிக்கு அனுமதி

பிரிட்டனில் கரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில் அஸ்ட்ராசெனிகா, மாடர்னா, பைஸர் நிறுவன தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 70 லட்சம் பேருக்கு மேல் செலுத்தப்பட்ட ஜேன்சென் என்கிற தடுப்பூசியை பிரிட்டனில் பயன்படுத்த மருந்துகள் ஒழுங்காற்று முகமை அனுமதியளித்திருக்கிறது. ஒரு தவணை மட்டுமே செலுத்தப்படும் இந்த தடுப்பூசி, கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் தீவிர பாதிப்புக்கு ஆளாவதிலிருந்து காப்பதில், 85 சதவீதம் செயலாற்றும் திறன் வாய்ந்தது என்பது சோதனையில் நிரூபணமானது. எனவே, பிரிட்டனிலும் இதை பயன்படுத்தும் பொருட்டு 2 கோடி தடுப்பூசிகளை அரசு ஆர்டர் செய்திருக்கிறது.

பிரிட்டனில் இதுவரை 3 கோடியே 80 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. அநேகமாக 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு ஜேன்சென் நிறுவன தடுப்பூசிகள் செலுத்தப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

five × three =