பிரிட்டனில் கரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் தெற்காசிய இனத்தினர்

 

பிரிட்டனில் பிற இன மக்களுடன் ஒப்பிடுகையில், தெற்காசிய இனத்தை சேர்ந்தவர்கள் கரோனா இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்படுவது ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

1 கோடியே 70 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இந்தத் தகவல் வெளியானது. இங்கிலாந்தில் கரோனா முதல் அலையின்போது அனைத்து இன மக்களும் பாதிப்படைந்தனர். ஆனால், இரண்டாம் அலையின்போது வெள்ளையர்களுடன் ஒப்பிடுகையில், கருப்பு மற்றும் மாநிற இனத்தினர் அதிகம் பாதிப்படைவது உறுதியானது. அதிலும், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை பூர்வீகமாக கொண்டவர்கள் கரோனா தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது.

இதுகுறித்து லண்டன் தொற்றுநோயியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் ரோகினி மாத்தூர் கூறுகையில், தெற்காசிய குழுவினரிடையே ஏற்றத்தாழ்வு அதிகமாவது வருத்தமளிக்கிறது. பிரிட்டனின் மாறுபட்ட இன மக்களுக்கு ஏற்ற வகையில், திறமையான தடுப்பு நடவடிக்கைகளை கண்டறிவதற்கான அவசர தேவையை இது உணர்த்துகிறது என்றார்.

பிரிட்டனில் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் வரையிலான கரோனா முதல் அலை பரவலின்போது ஒவ்வோர் இன சிறுபான்மை குழுவினரும் அதிகபட்ச பாதிப்பை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

18 + one =