பிரபல பாடகியை கேவலமாக திட்டிய இளையராஜா
அன்று முதல் இன்று வரை இசைஞானி இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இலர். இருப்பினும் இளையராஜா அதிகார திமிரு உள்ளவர். உடன் இருப்பவர்களுடன் தன்னுடைய கோபத்தை,. மேடை என்று கூட பார்க்காமல் காட்டிவிடுவார்அப்படித்தான் பிரபல பாடகியை இரட்டை அர்த்தம் கொண்ட பாடலை ஏன் பாடவில்லை என இளையராஜா கடுமையாக திட்டிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனதை வருடும் பாடல்களை பாடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் பாடகி சின்னக் குயில் சித்ரா. இசையமைப்பாளர் தேவா இசையில் உருவான பாடலை சின்னக் குயில் சித்ரா பாட முடியாது என சொல்லிவிட்டாராம். ஏனென்றால் அந்தப் பாடலில் இரட்டை அர்த்தம் உள்ள வல்கரான வார்த்தை அதிகமாக இருந்ததால், அந்த பாடலை எஸ்பிபி உடன் இணைந்து பாடுவதாக இருந்தது. ஆனால் எஸ்பிபி பாடலின் வரிகளை பார்த்துவிட்டு பாட முடியாது என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம். ஆனால் சின்ன குயில் சித்ராவால் அப்படி சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அந்த சமயம் தான் அவர் வளர்ந்து கொண்டு இருந்தாராம். இருப்பினும் அந்தப் பாடலின் இசையமைப்பாளர் தேவாவிடம் சென்று இந்த ஒன் லைன் மட்டும் மாற்றி தர முடியுமா என்று கேட்டிருக்கிறாராம். உடனே அவரும் மாற்றித் தர முயற்சிக்கிறேன் என்றாராம். அதன் பிறகு சித்ராவை அந்த பாடலில் இருந்து தூக்கி விட்டனர். வேறொரு பாடகி அந்த பாடலை பாடினார். இது எப்படியோ இளையராஜாவிற்கு தெரிய வந்தது. உடனே சித்ராவை அழைத்து, ‘பாடலின் வரிகள் அசிங்கமா இருந்தா உங்களுக்கு என்ன? அதையெல்லாம் ஏன் பார்க்கிறீர்கள்! உங்கள் வேலை எழுத்துக்களுக்கு குரல் கொடுப்பது மட்டும்தான். என கடிந்து கொண்டாராம். அப்போதுதான் சித்ராவிற்கு அவர் செய்த தவறு என்ன என்பது புரிந்ததாம். இப்போ வரைக்கும் அதை ஃபாலோ பண்ணி வருகிறேன் என்றும் சித்ரா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings