in

பிச்சைக்காரர்களுடன் செல்பி | Pichikaran 2 | Vijay Antony takes a selfie with beggars

https://youtu.be/V3vCsQ0lXQw%5B/embed%5D

பிச்சைக்காரர்களுடன் செல்பி

விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள படம் ‘பிச்சைக்காரன் 2’. இந்த ஆண்டு தொடக்கத்தில் லங்காவி தீவில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார். இதில் அவரது தாடை, மூக்கு எலும்புகள் உடைந்து படுகாயமடைந்தார். இந்த விபத்திலிருந்து மீண்டு குணமாகி வந்து படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக மே 19-ம் தேதி பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியானது. இப்படத்தில் காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ஹரீஷ் பரேடி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையில் இருந்து நடிப்பிற்கு வந்த விஜய் ஆண்டனி இப்படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

இந்த படத்திற்கு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருப்பதிக்கு இன்று வந்த நடிகர் விஜய் ஆண்டனி யாகசம் பெறுபவர்களுக்கு போர்வை, செருப்பு, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார். அத்துடன் அவர்களுடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

திருப்பதிக்கு நடிகர் விஜய் ஆண்டனி தகவல் கிடைத்ததும் அவரது ரசிகர்கள் குவிந்தனர். அவர்களு டன் விஜய் ஆண்டனி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்த அதானி | Adani Will Back | Britain Tamil News

மகா பெரியவரால் தலைதூக்கிய செங்கோல் | ‘Sengol’ From Tamil Nadu Symolised