‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் இருந்து கண்ணன் விலகுகிறார்
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து, கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரம், இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்’. 4 அண்ணன் – தம்பிகள் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், எத்தனையோ பிரச்சனைகள் வந்தாலும் ஒன்றாக இருந்த அண்ணன் தம்பிகள், தற்போது ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்து சென்று விட்டனர். இந்நிலையில் முல்லையின் வளைகாப்பில் அண்ணன் – தம்பிகள் மீண்டும் ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது மிகவும் பரபரப்பான கதைகளத்துடன் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியலில் இருந்து, கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரவண விக்ரம் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளதால், சீரியல் இங்கிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக.. ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வரும் ஐஸ்வர்யா, தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வரும் நவீன் வெற்றியுடன் இணைந்து… புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, விரைவில் யாரும் எதிர்பார்க்காத தகவல் வெளியாக உள்ளதாக கூறியுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings