in

பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர்


Watch – YouTube Click

பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர்

பெங்களூரில் தேசிய அளவில் நடைபெற்ற பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள புதுச்சேரி காவல்துறையின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஐபிஎஸ் அதிகாரி அனிதா ராய் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புதுச்சேரி மாநிலம் காவல்துறையில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வருபவர் ஐபிஎஸ் அதிகாரி அனிதா ராய். பவர் லிப்டிங் வீராங்கணையான இவர் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 63 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டு வெள்ளி பதக்கம் என்று புதுச்சேரி மாநில காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். பவர் லிப்டிங்கில் தேசிய அளவில் பதக்கம் வென்ற முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி இவர் ஆவார். ஏற்கனவே 2002-ஆம் ஆண்டு டெல்லி மாநிலத்தில் நடைபெற்ற பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கமும், மகாராஷ்டிராவில் நடைபெற்ற மாஸ்டர் தேசிய பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப்போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஐபிஎஸ் அதிகாரி அனிதா ராய் புதுச்சேரி திரும்பி அவர் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி மேலும் மேலும் பல்வேறு சாதனைகளையும், பதங்கங களையும் பெருமாறு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


Watch – YouTube Click

What do you think?

தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்

மேலப்பாளையத்தில் எஸ் டி பி ஐ கட்சியின் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்