“பல போராட்டங்களை கடந்து தான் நடிக்க வந்தேன்”.. துணிவு பட நடிகை
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் தான் மெர்சி சித்ரா. இவர் கலைஞர் டிவி, சத்தியம் டிவி பணியாற்றியுள்ளார்.இவர் சில படங்களில் டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தில் நடித்திருக்கிறார்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் பல தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ” செய்தி வாசிப்பாளராக இருப்பது சாதாரண வேலை இல்லை, அது மிகவும் கஷ்டமான ஒன்று தான்”.”எனக்கு சினிமாவில் பட வாய்ப்பு வந்த பிறகு ஆடிஷன் சென்றேன், ஆனால் பல பேர் பல விதமான அட்ஜஸ்ட்மென்ட் கேட்பார்கள், அதையும் தாண்டி வந்தால் என்ன போட்டோவில் கலராக இருந்தீர்கள், நேரில் கருப்பாக இருக்கிறீர்கள் என கேட்பார்கள், நடிப்பது என்றாலே பல கஷ்டங்களை கடந்து வர வேண்டும், நான் சந்தித்தது எல்லாமே பிரச்சனை தான், இது நமக்கு தேவையா என செய்தி வாசிப்பாளாராக தொடர்கிறேன்” என்று மெர்சி சித்ரா கூறியுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings